பிளாஸ்டர் தீர்வுகள் காரணமாகவே நாடு இவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாகவும், அதனால் பொருளாதாரத்திற்கு பிளாஸ்டர்களை பயன்படுத்தி தீர்வுகளை காண முடியாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இன்று (13) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அன்று ரணில் விக்ரமசிங்க தலைமைப் பொறுப்பை ஏற்கவில்லையென்றால், இந்த பாராளுமன்றம் இன்று சாம்பலாகியிருக்கும்.
இன்று பொருளாதாரத்தின் செயற்பாடுகள் சிறப்பாகச் சென்றுள்ளதால் உயிரிழக்காமல் வாழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.