வடக்குபுத்தூரில் திருடிய பொருட்களுடன் சிக்கிய திருடன்

புத்தூரில் திருடிய பொருட்களுடன் சிக்கிய திருடன்

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் கடை ஒன்றினை உடைத்து, பல்வேறு பொருட்களை திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும், திருட்டுப் பொருட்களை வாங்கியவரையும் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்றிரவு (12) கைது செய்துள்ளனர்.

குறித்த கடையானது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்து, கடையில் இருந்த தொலைக்காட்சி, கைப்பேசி, மீள்நிரப்பு அட்டைகள், சிகரெட் உள்ளிட்ட பல பொருட்கள் களவாடப்பட்டிருந்தன.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் புத்தூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவரை கைது செய்தனர்.

அவர் திருடிய தொலைக்காட்சியை விற்பனை செய்தவேளை அதனை வாங்கிய சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இதன்போது களவாடப்பட்ட ஏனைய பொருட்களும் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் பொலிஸார் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles