க.பொ.த. சாதார தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர பிரிவுக்கு விண்ணப்பிக்கும் போது, பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படும் என்பது தொடர்பில் கல்வி அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை குறிப்பிட்டார்.
சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகள் விண்ணப்பங்களை கோர வேண்டும்.
சராசரி மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறும் பாடசாலைகளில், அந்த பாடசாலை மாணவர்கள் உயர்நிலைக்கு விண்ணப்பிப்பதில் முன்னுரிமை வழங்கப்படும்.
ஒரு மாணவர் கல்வி பயிலும் பாடசாலையில் தொடர்புடைய பாடம் இல்லை என்றால், அந்த மாணவர் மற்ற பாடசாலைகளில சேர முன்னுரிமை பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
