தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள அடையாள வேலை நிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களில் சுமார் 7 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலைய கட்டிடங்களை தனியாருக்கு மாற்றுவது உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து தபால் தொழிற்சங்கங்கள் அண்மையில் (10) பிற்பகல் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று மாலை 04.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.
அதன்படி, மத்திய தபால் பரிவர்த்தனையில் மட்டும் 4 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால் பொருட்கள் குவிந்து கிடப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
