Wednesday, May 6, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகந்தகாடு புனர்வாழ்வு நிலையம்: தப்பிச் சென்ற 200 கைதிகள்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையம்: தப்பிச் சென்ற 200 கைதிகள்

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று (11) பிற்பகல் சுமார் 200 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

புலஸ்திபுர பொலிஸில் 60க்கும் மேற்பட்ட கைதிகள் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சரணடைந்த கைதிகள் இன்று (12) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

உணவு பிரச்சினை காரணமாக இந்த கைதிகள் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தப்பியோடிய கைதிகள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 15 கிலோமீற்றர் தூரத்தை கடந்து சோமாவதி காப்புக்காடுக்குள் நுழைய முயற்சித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிக்க பாதுகாப்பு தரப்பினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles