நாடாளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளதால் பத்தரமுல்லையைச் சூழவுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பத்தரமுல்லை, பெலவத்த மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற நுழைவு வீதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் இன்று மற்றும் நாளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
