Tuesday, March 18, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதுமானளவு அரிசி கையிருப்பில் - விவசாய அமைச்சர்

போதுமானளவு அரிசி கையிருப்பில் – விவசாய அமைச்சர்

சில அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கையாக உருவாக்க முயற்சிக்கும் அரிசி தட்டுப்பாடு இந்த பண்டிகை காலத்தில் அரிசியின் விலையை உயர்த்தும் தந்திரம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அதிக விலைக்கு விற்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களை மட்டுமே ஆய்வு செய்து வழக்குத் தொடர நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

அரிசி அல்லது பிற உணவுப் பொருட்களை மறைத்து வைக்கும் நபர்கள் மீது வழக்குத் தொடரவோ அல்லது அத்தகைய இடங்களை ஆய்வு செய்யவோ அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

இதன்காரணமாக, அரிசி பதுக்கல்காரர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தில் தேவையான திருத்தங்கள் அடுத்த மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles