தற்போது அமுலாகும் 3 மணித்தியால 20 நிமிட மின்வெட்டு 5 மணிநேரமாக நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் நீர் மின்னுற்பத்தி நெருக்கடி காரணமாக இந்த நேர அதிகரிப்பு இடம்பெறவுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது அமுலில் உள்ள மின்வெட்டு காலப்பகுதியை அதிகரிக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
