Saturday, March 15, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாரின் மக்கள் சந்திப்பு தினம் மீண்டும் ஆரம்பம்

பொலிஸாரின் மக்கள் சந்திப்பு தினம் மீண்டும் ஆரம்பம்

கொவிட் 19 பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபரின் மக்கள் சந்திப்பு தினம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 9 மணி முதல் பொலிஸ்மா அதிபரின் மக்கள் சந்திப்பு இடம்பெறும் என அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அறிவுறுத்தல்களுக்கமைய, இந்த மக்கள் சந்திப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பொலிஸ் நிலையங்கள் மற்றும் விசாரணை பிரிவுகளுக்கு தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் அளிக்கப்படும் முறைப்பாடுகள் குறித்து எதிர்பார்க்கப்பட்ட நிவாரணம் கிடைக்காவிடின் அல்லது காலதாமதம் ஏற்படுமாயின் அது குறித்து இதன்போது முறையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles