மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மாற்றமானது நாளை (09) முதல் அமுலுக்கு வரும் என கலால் திணைக்களம் கூறியுள்ளது.
கலால் கட்டளைச் சட்டத்தின் 52 ஆவது அதிகார சபையின் உட்பிரிவு 32-1 இன் அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினான் பணிப்புரையின் கீழ் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாதாரண தர மதுபான சாலைகளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அனுமதி பெறாத மதுபானசாலைகள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அனுமதி பெற்ற மதுபானசாலைகள் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.