கொலை சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் நேற்று (07) மரண தண்டனை விதித்துள்ளது.
மத்துகம, போபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஒருவருக்கும், களுத்துறை – பொதுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஒருவருக்குமே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
16 வருடங்களுக்கு முன்னர் மத்துகமவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி மேற்படி நபர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபிட்டிய – சாரானந்த மாவத்தையில் தனது இரண்டு மகன்களுடன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்த நபர் ஒருவர் அங்குள்ள மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது தாக்கப்பட்டார்.
தாக்குதலின் போது, குறித்த நபர் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
இக்கொலை தொடர்பில் 12 சந்தேகநபர்கள் மத்துகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக 16 ஆண்டுகள் நீண்ட விசாரணை நடைபெற்று, 10 சந்தேக நபர்களில் இருவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இதன்படி, கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட இரு குற்றவாளிகளுக்கு நேற்று (07) மரண தண்டனை விதிக்கப்பட்டது.