ஹரக் கட்டா, குடு சலிந்து ஆகிய இரு பிரபல பாதாள உலக குழு உறுப்பினர்களை மேலும் 90 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 06 அன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம், ஹரக் கட்டாவை தடுப்புக் காவலில் வைக்க அவருக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், அவரை பொருத்தமான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிஐடிக்கு உத்தரவிட்டது.
ஹரக்கட்டா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருந்தது.