செய்திகள்உள்நாட்டுஅடுத்த வருடம் மின் கட்டணம் குறையலாம்

அடுத்த வருடம் மின் கட்டணம் குறையலாம்

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின்சாரக் கட்டணம் குறையலாம் என எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கும் நாடு. எரிபொருளில் சிக்கல் ஏற்பட்டது.

அத்தியாவசிய மருந்துகளில் சிக்கல் ஏற்பட்டது. இப்போது நாடு படிப்படியாக நிலைபெற்று வருகிறது – என்றும் அவர் இதன்போது கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles