பலாங்கொடை இபுல்பே பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் வெடிப்பு ஏற்பட்ட வீடுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகள் சென்றிருந்தனர்.
பலாங்கொடை இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெல்லங்கந்த குடாகார பகுதியில் உள்ள ஆறு வீடுகளில் காலநிலையால் வெடிப்பு ஏற்பட்டதுடன் சில பகுதிகள் தால் இறங்கியுள்ளன.
இதனால் மூன்று வீடுகளில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
அத்தோடு பொல்தும்ப – தேவாலயகம பகுதியில் உள்ள நான்கு குடும்பத்தவர்கள் கனத்த அச்சத்தினால் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
இச்சிலையில் குறித்த பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவக அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.