Friday, January 16, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீதியோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு உத்தரவு

வீதியோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு உத்தரவு

கோட்டே – தலவத்துகொட வீதியில் கிம்புலாவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதியோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த விற்பனை நிலையங்களை இம்மாதம் 08 ஆம் திகதிக்குள் அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இந்த கடைகளை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேல் மாகாண நிறைவேற்று பொறியியலாளர் கையொப்பமிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இதற்கான காரணம் தெரியவில்லை என்றும், தங்கள் கடைகளை அகற்ற தயாராக இல்லை.

இவ்வாறு அகற்றினால், தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்றும் வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles