Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்க பல்கலையில் துப்பாக்கி சூடு: மூவர் பலி

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கி சூடு: மூவர் பலி

அமெரிக்காவின், லொஸ் வேகாஸ் – நெவாடா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (06) துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.

துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து, துப்பாக்கி தாரி மீது அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் இறந்ததாக பல்கலைக்கழக காவல்துறைத் தலைவர் உறுதிபடுத்தியுள்ளார்.

அந் நாட்டு நேரப்படி நேற்று முற்பகல் 11.45 மணியளவில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தள்ளார்.

படுகாயமடைந்த அவர் உள்ளூர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles