Sunday, April 20, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகறுவா விலையில் வீழ்ச்சி

கறுவா விலையில் வீழ்ச்சி

இலங்கை சந்தையில் கறுவா விலை குறைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது

அல்பா கறுவாப்பட்டை இலங்கை கறுவா சந்தையில் கிடைக்கும் மிக உயர்ந்த தரமாகும்.

ஒரு கிலோகிராம் அல்பா கறுவா 4,800 ரூபா முதல் 5,000 ரூபா வரையில் விற்பனைசெய்யப்பட்ட நிலையில் தற்போது சந்தையில் 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கட்டுவன மற்றும் வலஸ்முல்ல பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதாரம் கறுவா செய்கையாகும்.

விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தற்போது கறுவாவின் விலை குறைந்துள்ளது. இந்நிலையில் கறுவா செய்கையை பிரதான வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் பெரும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles