தென்கொரியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் இருந்த மற்றுமொரு இலங்கையரால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 3 ஆம் திகதி காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த பி.கே.ஜனித் துராஜ் சதுரங்க என்ற 29 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துக்கான பின்புலம் இன்னும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.