Wednesday, April 23, 2025
26 C
Colombo
வடக்குஉழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு மூன்றரை வயது குழந்தை பலி

உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு மூன்றரை வயது குழந்தை பலி

உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு மூன்றரை வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நெடுங்கேணி பகுதியை சேர்ந்த சிவயோகநாதன் விந்துயன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி குறித்த குழந்தையின் தந்தை உழவு இயந்திரத்தின் சுழலக் கூடிய கலப்பையை வீட்டில் வைத்து இயக்கிக் கொண்டு இருந்தவேளை குழந்தை தடி ஒன்றினை கலப்பையினுள் வைத்துள்ளது.

அதன்போது தடி கலப்பையினுள் இழுக்கப்பட்டவேளை குழந்தையும் சேர்ந்து இழுபட்டதனால் கலப்பையில் சிக்குண்டு படுகாயமடைந்தது.

இவ்வாறு படுகாயமடைந்த குழந்தை ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் நேற்றையதினம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles