Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஞாயிறு ஆராதனையில் பங்கேற்காத சிறுமியை தாக்கிய பங்குத் தந்தை

ஞாயிறு ஆராதனையில் பங்கேற்காத சிறுமியை தாக்கிய பங்குத் தந்தை

சாகவச்சேரியில் உள்ள தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தை கத்தோலிக்கராக உள்ள போதும் தாயார் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் எனவும், அதனால் அவர் தேவாலயத்திற்கு தொடர்ச்சியாக செல்வதில்லை எனவும், தந்தையாருடன் சில சமயம் தேவாலயம் சென்று வரும் பழக்கம் உடையவர் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், கடந்த சில நாட்கள் தேவாலயத்திற்கு வருகை தராததால், அந்த சிறுமியை அழைத்து பங்குத் தந்தை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்குள்ளான சிறுமி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles