இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, காலை 8.30 முதல் 5.30 வரையான காலப்பகுதிக்குள் இந்த மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
தேவையேற்படின், இரவு வேளையில் முன்னறிவித்தல் இன்றி 30 நிமிட மின் துண்டிப்பு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.