உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நடைபெறும் கொப் 28 எனப்படும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம், விவசாய நவீனமயமாக்கல், தரவு அமைப்புகள் மற்றும் காலநிலை நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு தமது ஆதரவை வழங்குவதாக பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.