பெங்களூரில் உள்ள 44 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளார்.
இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து விரைந்து சென்ற பொலிஸார், பாடசாலைகளில் இருந்து மாணவர்களை வெளியேற்றினர்.
மேலும், பாடசாலைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டதுடன், இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.