அவுக்கண புத்தர் சிலைக்கு அங்கியை அணிவித்ததற்காக மன்னிப்புக் கோருவதாக லியோ அமரானந்த தெரிவித்துள்ளார்.
கடந்த பௌர்ணமி தினத்தன்று, அவரும் ஒரு குழுவினரும் வரலாற்று சிறப்புமிக்க அவுக்கண புத்தர் சிலையை அங்கியால் மூடி, வித்தியாசமான பூஜையில் ஈடுபட்டதால், அந்த செயல் சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது.
இச்சம்பவத்திற்கு தொல்லியல் அறிஞர்கள் உட்பட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு தொல்லியல் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.