தெற்கு அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாகவும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகவும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது.
அது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணித்தியாலங்களில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதனால், காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் பயணம் செய்வது ஆபத்தானது.
எனவே, மீனவ மற்றும் கடற்படை சமூகங்கள் மறு அறிவித்தல் வரை மேற்படி கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.