ஆணுறை விற்பனை இயந்திரங்கள் நிறுவும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய STD மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி வித்யாபத்திரன தெரிவித்தார்.
2017 முதல் இந்த ஆணுறை விற்பனை இயந்திரத்தை நிறுவும் பணி ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்கான புதிய நடவடிக்கையாக இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிளினிக்குகளுக்கு வரும் மக்களுக்கு கருத்தடை மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வருடம் மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கருத்தடை சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த வாரம் 20 இலட்சம் கருத்தடை சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.