Saturday, April 19, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையின் முகாமைத்துவ பீடம் அடுத்த மாதம் மீள திறப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையின் முகாமைத்துவ பீடம் அடுத்த மாதம் மீள திறப்பு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் அடுத்த மாதம் 4ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளது.

அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே குறித்த அறிவிப்பை இன்று விடுத்துள்ளார்.

உப வேந்தரின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்திற்கு முன்பாக, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை காரணமாக கடந்த 20ஆம் திகதி முதல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக 6 மாணவர்களுக்கு வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles