நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இன்று (29) கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இதன்படி அம்புலுவாவ சுற்றுலாப் பகுதிக்கு கேபிள் கார் ஒன்று நிர்மாணிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான ஒப்பந்தத்தில் சீனா மெஷின் பில்டிங் இன்டர்நேஷனல் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
