Thursday, August 28, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட தொல்பொருட்கள் மீண்டும் இலங்கைக்கு

நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட தொல்பொருட்கள் மீண்டும் இலங்கைக்கு

ஒல்லாந்து ஆட்சியின் போது (1640-1796) இலங்கையில் இருந்துகொண்டு செல்லப்பட்ட 06 விலைமதிப்பற்ற பழங்கால ஆயுதங்களை நெதர்லாந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

கொண்டுவரப்பட்ட பொருட்களில் கிர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின் திருமண வாள், மன்னரின் வெள்ளி கஷ்கொட்டை, மன்னரின் தங்கக் கத்தி, லெவ்கே தலைவரின் பீரங்கி மற்றும் இரண்டு பெரிய துப்பாக்கிகள் உள்ளடங்கியுள்ளன.

இன்று (29) அதிகாலை 05.05 மணியளவில் ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-5544 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்தக் கலைப்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த தொல்பொருட்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பு, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரால் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் கையளிக்கப்பட்டதுடன், அவர் அதனை தேசிய அருங்காட்சியக திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கையளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles