பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சிராஷ் நூர்டீன் பதவி விலகியுள்ளார்.
இந்த அலுவலகத்தினால் சுதந்திரமாக இயங்கமுடியவில்லை எனவும், நீதியமைச்சின் தலையீடுகள் அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார்.
போதிய நிதி ஒதுக்கமோ, அரசாங்கத்துக்கு அர்ப்பணிப்போ இல்லை.
நீதியமைச்சின் நேரடி தலையீடுகள் அதிகம் இருக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அலுவலகத்தின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு எதனையும் செய்ய முடியாதுள்ளதால் இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.