Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாசாவில் சிக்கிய இலங்கை குடும்பம் நாடு திரும்பியது

காசாவில் சிக்கிய இலங்கை குடும்பம் நாடு திரும்பியது

காசாவில் சிக்கிய நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் கடந்த நவம்பர் 24 ஆம் திகதி பத்திரமாக நாட்டை வந்தடைந்தனர்.

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு குடும்பத்தைத் திருப்பி அனுப்புவதற்கு வசதி செய்துள்ளது.

நாடு திரும்பிய இலங்கையர்களை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.

கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், எகிப்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு, எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ரஃபா எல்லைக்கு சென்று சிக்கித் தவித்த இலங்கையர்களை வரவேற்றனர்.

புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் (IOM) உதவியுடன் திரும்பியவர்களுக்கான உதவிகள் மற்றும் விமான போக்குவரத்து ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சு செய்தது.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஏற்பட்ட நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து கெய்ரோ மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்பில் காசா பகுதியிலிருந்து மொத்தம் 15 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles