ஜா-அல பகுதியில் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி நேற்று (23) காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் இன்று (24) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜா-எல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் சேதவத்த கால்வாய்க்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.