முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவிற்கு வவுனியா மேல்நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்காவை கைதுசெய்யுமாறு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கின் சாட்சிஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக வவுனியா மேல்நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த ரங்கா குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டதுடன் கடந்த 8 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது வழக்கு வவுனியா மேல்நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அவருக்கு மேல்நீதிமன்ற நீதிபதி நிகால் அவர்களால் பிணை வழங்கப்பட்டது.