மலிவான எரிவாயுவை இறக்குமதி செய்யும் நடவடிக்கை குறித்து லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தெஷார ஜயசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாம் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டத்தின் மூலம் தாய்லாந்தில் இருந்து மலிவான எரிவாயுவைப் பெறுவதற்கான வாய்ப்பு தற்போது சாத்தியமாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் எதிர்வரும் 12 மாதங்களுக்கு தேவையான எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக அனைத்து தூதரகங்களுக்கும் அறிவித்து ஆரம்பிக்கப்பட்ட திட்டம் மூலம், இதுவரை தனிப்பட்ட குழுவொன்றினால் நிர்வகிக்கப்பட்ட சர்வாதிகார மாஃபியாவை உடைத்தெரிய முடிந்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்தார்.