Saturday, September 13, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாட்டலிக்கு எதிரான வழக்கை இடைநிறுத்த உத்தரவு

பாட்டலிக்கு எதிரான வழக்கை இடைநிறுத்த உத்தரவு

2016 ஆம் ஆண்டில் ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நிதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கை இடைநிறுத்துமாறு அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றை விசாரிப்பதற்கு அனுமதியளித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles