ஹமாஸ் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளவர்களில் 13 பேரை இன்றைய தினம் விடுவிக்கவுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இணங்கியதன் அடிப்படையில், விடுவிக்கப்படவுள்ள 50 பணயக்கைதிகளில் முதல் கட்டமாக 13 பணயக் கைதிகள் இன்றைய தினம் விடுவிக்கப்படுவார்கள் என கட்டார் குறிப்பிட்டுள்ளது.
பணயக் கைதிகளை விடுவிப்பதற்கும், பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் நான்கு நாட்கள் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் 150 பாலஸ்தீனியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.