அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் கலேவெல, மாத்தளை சந்திக்கு அருகில் நேற்று (23) இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளையில் இருந்து கலேவெல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த பௌசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
லோச்சனா காவ்யாஞ்சலி என்ற 20 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் தந்தைஇ தாய் மற்றும் இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நால்வரும் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்இ ஒரு மகள் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதி பொலன்னறுவை சிறிபுர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.