Monday, May 12, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெடுஞ்சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு - 2 கோடி ரூபாவுக்கு மேல் வருமானம்

நெடுஞ்சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – 2 கோடி ரூபாவுக்கு மேல் வருமானம்

அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் கடந்த 22 ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையில் மாத்திரம் 21,044,755 ரூபா வருமானம் கிடைத்ததாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை எதிர்கொண்டாலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையானது முப்படை இராணுவத்தினரை வைத்து கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுத்தது.

நெடுஞ்சாலை ஊழியர்கள் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்ததால், பாதுகாப்புப் படையினர் மாற்று வழிகளைப் பயன்படுத்தி டிக்கெட் வழங்கினர்.

இது அனைத்து பரிமாற்ற மையங்களிலும் முன்னெடுக்கப்பட்டு, காலை 9 மணியளவில் முறையாக கட்டணங்களை வசூலித்ததாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles