நாட்டின் நெருக்கடியான சூழ்நிலைக்கு தீர்வாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என சில கட்சிகள் கோருகின்றன.
அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வினவப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நாலக்க கொடஹேவா, தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடத்தும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்தார்.
மக்கள் நாட்டின் நெருக்கடிக்கும், பற்றாக்குறைகளுக்கும் தீர்வை கோருகின்றனரே தவிர, தேர்தலைக் கோரவில்லை.
எனவே இந்த நெருக்கடிகள் தீர்க்கப்பட்டதன் பின்னர், தேர்தல் நடத்துவது குறித்து சிந்திக்கலாம் என அவர் பதிலளித்தார்.