Wednesday, May 14, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி

115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி

2023 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன.

இது ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகளின் தரத் தோல்விகளைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 58 மருந்துகளும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 45 மருந்துகளும், ஏனையவை சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன், விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles