சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் கடத்திய நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனத்துடன், நான்கு மாடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் இருந்து யாழ்.நகர் பகுதியை நோக்கி பட்டா ரக வாகனத்தில் மாடுகளை கடத்தி சென்ற வேளை, பொலிஸார் குறித்த வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.
அதனை அடுத்து மாடுகளை கடத்திய குற்றத்தில் வாகன சாரதியை கைது செய்த பொலிஸார் வாகனத்தையும், மாடுகளையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்