இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1200 கிலோ பீடி இலைகளுடன் இருவரை கல்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டி – ஏத்தாலே பகுதியில் நேற்று (22) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கல்பிட்டி – பீத்தலே பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பீடி இலைகள் 40 பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்டிருந்ததாகவும், சந்தேகநபர்கள் கல்பிட்டி – ஏத்தாலே – எரம்புகொடெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.