Tuesday, July 29, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சர் ரொஷானின் உயிருக்கு அச்சுறுத்தல்: விசாரணைகள் ஆரம்பம்

அமைச்சர் ரொஷானின் உயிருக்கு அச்சுறுத்தல்: விசாரணைகள் ஆரம்பம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உயிருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் தகவல் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இதனைக் குறிப்பிட்டுள்ளது.

பொலன்னறுவை பதுலுவெவ சிறிசங்கபோ இடம் இலக்கம் 1 இல் வசிக்கும் ஆர். எஸ். ரொஷான் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாரிய கொள்ளை விசாரணைப் பிரிவு நீதிமன்றில் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles