Saturday, March 15, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇஸ்ரேல் - இலங்கை வேலைவாய்ப்பு ஒப்பந்தம் பரிசீலனைக்கு

இஸ்ரேல் – இலங்கை வேலைவாய்ப்பு ஒப்பந்தம் பரிசீலனைக்கு

இஸ்ரேலின் விவசாய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் தொடர்பான அறிவித்தல் அமைச்சரவையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, இஸ்ரேல் நாட்டில் துல்லியமான தொழில் சந்தைத் துறைகளில் இலங்கைத் தொழிலாளர்களை தற்காலிகமாக ஈடுபடுத்துவதற்காக இஸ்ரேல் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கும் இரு நாடுகளுக்கிடையிலான அடிப்படை ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கும் 2020 இல் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலின் மக்கள் தொகை, குடிவரவு மற்றும் பிரதேச ஆணையம் இஸ்ரேலின் விவசாய நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்க்கிறது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு நவம்பர் 06 ஆம் திகதி நடைமுறைப்படுத்தல் திட்டத்தில் இரு தரப்பினரும் கையொப்பமிட்டதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிவித்தல் அமைச்சரவையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles