பசுபிக் வேர்ல்ட் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
எகிப்தில் இருந்து வந்த இந்த கப்பலில் 1691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்கள் உள்ளனர்.
இந்தக் கப்பலில் அதிகளவான ஜப்பானிய மற்றும் சீனப் பயணிகள் இருப்பதாகவும், அவர்கள் கொழும்பு, காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கு பயணிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பனாமா நாட்டின் கொடியுடன் வந்த பசுபிக் வேர்ல்ட் கப்பல் இன்று இரவு மலேசியா நோக்கி புறப்பட உள்ளது.