Monday, May 12, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளம் பிக்குவின் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

இளம் பிக்குவின் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

தெனியாயவில் கடந்த 16 ஆம் திகதி இளம் பிக்கு ஒருவரால் ஆயுததத்தால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தெனியாய பல்லேகம பகுதியில் வைத்து கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், பல்லேகம – கங்கொட வீதியில் அமைந்துள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் வைத்து தாக்கப்பட்டார்.

கட்டுவன பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்காக சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

முதலில் தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

திருமணமான 37 வயதான பொலிஸ்காரர்இ இந்த விடயம் தொடர்பாக அவரை தாக்கிய பதின்ம வயது பிக்குவின் 26 வயது சகோதரியுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

தெனியாய பொலிஸார், குறித்த இளம் பிக்குவை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles