கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது அரசாங்கத்தின் கடந்த 8 மாத காலத்துக்கான வருமானம் பாரியளவுக்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய வரிகளே இந்த வருமான அதிகரிப்புக்கான பிரதான காரணம் என கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் வரையான எட்டு மாதங்களில் அரசாங்கம் சுமார் 1,826.62 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் அரசாங்கம் ஈட்டிய வருமானம் 1,272.78 பில்லியன் ரூபாவாகும்.
அதேநேரம் குறித்த காலப்பகுதியில் வரிகள் ஊடாக திரட்டிய வருமானம் 1,661.15 பில்லியன் ரூபா என்றும் அது கடந்த ஆண்டை விட 47.8 சதவீத அதிகரிப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.