Monday, June 29, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு ஒவ்வாமை: 10 மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவு ஒவ்வாமை: 10 மாணவர்கள் வைத்தியசாலையில்

காலி ஹியாரே கிழக்குக் கல்லூரியைச் சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று பாடசாலையில் தயாரிக்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரியில் 06ஆம் தரத்தில் கல்வி கற்கும் 10 மாணவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மனை பொருளியல் பாடத்திற்காக, குறித்த சிறுவர்கள் இன்று (17) காலை பாடசாலையில் தயாரிக்கப்பட்ட சாண்ட்விச்களை சாப்பிட்டதையடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களின் நிலைமை மோசமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles