ஹமாஸ் அமைப்பினரின் பணயக்கைதியாக இருந்த 65 வயதான இஸ்ரேலியப் பெண் யெஹுதித் வெயிஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸால் கடத்தப்பட்ட 65 வயதான யெஹுதித் வெய்ஸின் சடலம் காசா பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அவரது உடலை அடையாளம் காணும் செயல்முறையை மேற்கொண்ட பின்னர், அவரது மரணம் குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.