தற்போது உள்ளூர் சந்தையில் முட்டைகள் அளவுக்கு அதிகமாக இருப்பதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
இதனால் உள்ளூர் சந்தையில் 30 ரூபா தொடக்கம் 42 ரூபாவிற்கு முட்டைகளை கொள்வனவு செய்ய முடிவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில், பண்டிகைக் காலங்களில் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டாம் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம், வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உள்ளுர் முட்டைகள் உபரியாக குறைந்த விலையில் உள்ளுர் சந்தைக்கு வருவதன் பின்னணியில் நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி முட்டைகளை வழங்கும் திறன் நாட்டில் உள்ள முட்டை உற்பத்தியாளர்களுக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.